காதலர் உடனான புகைப்படம் ஒன்றை நடிகை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்த பிரியா பவானி சங்கர், பின்னர் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
கடைக்குட்டி சிங்கம், மேயாத மான், யானை உள்ளிட்ட படங்கள் பிரியாவுக்கு வரவேற்பை பெற்றுத் தந்தது. அடுத்ததாக இந்தியன் 2, பொம்மை, அகிலன், ருத்ரன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதில், எங்களுக்கு 18 வயது இருக்கும்போது கடற்கரை அருகே ஒரு வீடு கட்ட வேண்டும் என்று கனவு கண்டோம். அந்த கனவு இன்று நனவாகி, எங்கள் புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம் என்று கூறியுள்ளார்.
newstm.in