கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜித் கிளின்டன் (25). இவர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சித்திரபுரம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து சிறுமியை ஏமாற்றி நாகர்கோவிலுக்கு அழைத்து வந்துள்ளார்.
பின்பு சிறுமிக்கு பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்து வந்த அஜித் கிளிண்டனை தீவிரமாக தேடி வந்தநிலையில் அஜித் கிளிண்டனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.