கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முன்னர் இருந்ததை விட நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறையை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வதே தனது நம்பிக்கை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (3) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் பல்வேறு தடைகள் உள்ள போதிலும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு தொழில்துறையை மேம்படுத்த தயாராக உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
புதிய அரசியல் கலாசாரத்தில் புதியதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு புதிய சிந்தனைகள் ஊட்டப்பட வேண்டும் என்றார்.
2023 ஆண்டு வரவு செலவுத்திட்ட குழு நிலை விவாததத்தில் ,நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாததத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது ‘நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செலவுத் தலைப்புகள் 123, 291, 309 முதல் 311 வரை இன்று நாம் விவாதிக்கப் போகிறோம். பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், இந்த வரவு செலவுத் தலைப்பு குறித்து கருத்து தெரிவிக்கும் அனைத்து கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் நாட்டின் பொருளாதார நெருக்கடியைப் புரிந்துகொண்டு நாட்டு மக்களுக்கு பயனுள்ள ஆலோசனைகள் மற்றும் யோசனைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதுமட்டுமல்லாமல், இந்த அமைச்சு தொடர்பில் திருத்தப்பட வேண்டிய குற்றச்சாட்டுகள் அல்லது திருத்தம் செய்யப்பட மாற்றங்கள் இருப்பின், அவற்றை முன்வைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
கடந்த சில நாட்களாக வரவு செலவுத் திட்ட விவாதத்தைக் கேட்கும் போது, இம்முறையும் பாரம்பரியமான நலன்புரி வரவுசெலவுத் திட்டத்தையே எதிர்பார்த்துள்ளனர் என்பது எமது மாண்புமிகு அமைச்சர்களின் பேச்சிலிருந்து தெரிந்தது. இது போன்ற பாரம்பரிய பொதுநல வரவு செலவு முன்வைக்க செய்ய நேரம் இல்லை. இந்த நேரத்தில் நாட்டுக்கு தேவையான சிறந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக நான் நம்புகிறேன்.
தற்போதைய நிலையில் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் இந்த அமைச்சுக்கு 48,491 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர் செலவினமாக 2,744 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தத் தொகையிலிருந்து 43,740 மில்லியன் ரூபாவை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கியுள்ளோம். நகர அபிவிருத்தி திட்டங்களுக்கு 20,433 மில்லியன் ரூபாவும், வீடமைப்பு அபிவிருத்தி திட்டங்களுக்கு 16,057 மில்லியன் ரூபாவும், கழிவு முகாமைத்துவம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு திட்டங்களுக்கு 7,250 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சின் கீழ் உள்ள 4 திணைக்களங்களுக்கு 2007 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றுநோயால் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டில் பல அபிவிருத்தித் திட்டங்கள் சீர்குலைந்துள்ளன. சந்தையில் பொருட்களின் பற்றாக்குறையும், மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பும், இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டியிருந்ததால், இந்த நிலை ஏற்பட்டது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். இவ்வாறானதொரு பின்னணியில் நான் இந்த அமைச்சினை பொறுப்பேற்றேன்.
இந்த தலைப்பு எனக்கு புதிதல்ல. மேல் மாகாண சபையில் இவ்விடயம் தொடர்பான அமைச்சுப் பதவியை நான் வகித்துள்ளேன். மேல் மாகாண வீடமைப்பு மற்றும் நகர திட்டமிடல் அமைச்சு பதவியாகும்.. இலங்கையின் பொருளாதார ரீதியில் மிக முக்கியமான மாகாணத்தின் முதலமைச்சராக கடமையாற்றியுள்ள நான், உங்கள் அனைவரினதும் ஆதரவுடன் இந்த அமைச்சை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இந்த அமைச்சகத்தின் கீழ் 21 நிறுவனங்கள் உள்ளன. இந்த 21 நிறுவனங்களும் நாட்டின் வளர்ச்சிக்கு நேரடியாகப் பங்காற்றுகின்றன. இந்த நிறுவனங்கள் கடந்த காலங்களில் சில சரிவை சந்தித்துள்ளன. இந்த அமைச்சில் பணியாற்றக்கூடிய இரு இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி நியமித்தார். அமைச்சகத்தின் கீழ் உள்ள 21 நிறுவனங்களில்,
1. நகர அபிவிருத்தி அதிகாரசபை,
2. காணி நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனம்
3. தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம்
4. கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனம்
மற்ற அனைத்து நிறுவனங்களின் பொறுப்பையும் இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைத்துள்ளேன். அதனை அரச வர்த்தமானியில் வெளியிடவும் ஏற்பாடு செய்துள்ளோம். அந்த நிறுவனங்கள் உத்தியோகபூர்வமாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவை அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கும் பொறுப்பு என்று நான் தெரிவித்தேன். ஏனெனில் நாம் அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். நான் எல்லாவற்றையும் கட்டிக்கொண்டு அளும் ஆள் இல்லை. பகிர்ந்து கொண்டு வேலை செய்பவர்.
சில நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வேலையைப் பாதுகாத்து, நிறுவனங்களை லாபகரமாக மாற்றுவதற்கான வழிமுறைகளை நாங்கள் வழங்கியுள்ளோம்.
அமைச்சரவை அமைச்சர் என்ற வகையில் நான், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர் உட்பட சகல நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் எமது அமைச்சின் கீழ் உள்ள மேல்மட்ட மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பு தற்போதைய சூழ்நிலையில் இந்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு துறையை மீட்பதே. மற்றும் துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் முதல் அதிக முதலீட்டாளர் வரை பாதுகாப்பதும் அதற்கான கொள்கை முடிவுகளை எடுத்தல் மற்றும் செயல்படுத்துதலும் ஆகும்.
நான் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சைப் பொறுப்பேற்ற பின்னர், நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை அடையாளம் காண்பதே முதலில் நான் செய்தேன். அந்தச் சவால்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றுக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டது. தொடர்புடைய தீர்வுகள் பற்றி விவாதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. அந்த வேலைத்திட்டத்தின் போது, பொருளாதார நெருக்கடியால் பாதியில் நிறுத்தப்பட்ட கடன்கள், மானியங்கள், வீட்டுத் திட்டங்கள் மற்றும் நகர அபிவிருத்தி பிரேரணைகள் மீண்டும் தொடங்க ஒரு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டது. அதற்காக குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டத்தை நாங்கள் இனங்கண்டுள்ளோம்.
கோவிட் தொற்றுநோய்க்கு பிந்தைய சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடியால் சரிந்த நிர்மாணத்துறையை காப்பாற்றுவது எங்களுக்கு இருந்த முதல் சவால். இந்தத் துறையில் சுமார் 10 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்து வருகின்றனர். இறக்குமதி கட்டுப்பாடுகள், விநியோகம் மற்றும் போக்குவரத்து தாமதங்கள், வங்கி வசதி கட்டுப்பாடுகள், ரூபாய் மதிப்பு சரிவு, எரிபொருள் விலை, கட்டுமானப் பொருட்களின் பற்றாக்குறை போன்ற விஷயங்கள் இந்தத் துறையின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.
இந்நிலையை உணர்ந்து அமைச்சு என்ற ரீதியில் நிர்மாணத்துறையை பாதுகாக்க சில விசேட நடவடிக்கைகளை எடுத்தோம். நிர்மாணத்துறையின் உயிர்வாழ்விற்கான சலுகை நடவடிக்கையை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதே எமது முதல் நடவடிக்கையாகும். இதன் விளைவாக கௌரவ ஜனாதிபதி அவர்கள் அமைச்சரவை பத்திரத்தை சமர்பித்தார். அந்த அமைச்சரவைப் பத்திரத்தை நான் முன்வைக்கிறேன்.
இதனால் 2020 மார்ச் முதல் 2022 டிசம்பர் இறுதி வரை நிர்மாணத்துறை தொழிலில் ஈடுபடுவோருக்கு சலுகை வழங்கப்படும். இந்த சலுகைகளை அடுத்த ஆண்டு (2023) டிசம்பர் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் அதற்காக அமைச்சரவையில் அமைச்சுக் குறிப்பை சமர்பிப்பேன் என நம்புகிறேன்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படும் நிர்மாணங்களுக்கான தாமதமான கொடுப்பனவு 12 பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளது. நெடுஞ்சாலை நிர்மாணத்துறை ஒப்பந்ததாரர்களும் அதே தொகையை செலுத்த வேண்டியுள்ளது.
நமது வீடமைப்பு அமைச்சின் கீழ் செலுத்த வேண்டிய இந்தத் தொகை முறையாகவும், இடையிடையேயும் செலுத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டின் முதல் காலாண்டின் இறுதிக்குள் இந்தக் கொடுப்பனவுகளை எங்களால் முடிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எமது அமைச்சின் கீழுள்ள சீடா நிறுவனம் (நிர்மாணத்துறை அபிவிருத்தி அதிகார சபை) நிர்மாணத்துறையின் முன்னேற்றத்திற்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உண்மையைச் சொல்வதானால், இந்த நிறுவனத்தை நாங்கள் இதுவரை சரியாகப் பயன்படுத்தவில்லை. உதாரணமாக, நிர்மாணத் தொழிலில் ஈடுபட்டுள்ள மிகக் குறைந்த தொழிலாளி முதல் உயர்ந்த நபர் வரை, தொழில்முறை அங்கீகாரத்தை உருவாக்க எந்த வேலையும் செய்யப்படவில்லை. அத்தகைய அங்கீகாரத்தை உருவாக்க, தொழில்முறை தரநிலைப்படுத்தல் செய்யப்பட வேண்டும். அந்த பணி இந்த நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டு வாரங்களுக்கு முன், ஏற்கனவே உள்ள நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தை அமுல்படுத்தி, சிறிது காலம் தாமதமாகி வந்த நிர்மாணத்துறை தொழிலாளர்கள் மற்றும் திறமையான நிர்மாணத்துறை தொழிலாளர்களை வகைப்படுத்தத் தொடங்கினோம். அதன்படி தற்போது நிர்மாணத்துறை தொழிலாளர்களுக்கு தொழில்சார் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதன் காரணமாக அவர்களின் பணிப் பாதுகாப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டில் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க (ச.ஜ.ப) – அண்மையில், நிர்மாணத்துறையுடன் தொடர்புடைய பல நிறுவனங்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துரையாடினார். அவர்களுக்கு சுமார் 200 பில்லியன் ரூபாய் கிடைக்கும். மேலும், வெளிநாடுகளில் தொழில் செய்து வருபவர்களுக்கு தேவையான சான்றிதழ்களைப் பெறுவதில் கடும் சிக்கலை எதிர்நோக்கி வருகின்றனர். விசா வசதிகளைப் பெறுவதில் உள்ள குறைபாடுகள் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் குறித்தும் அவர் பேசினார். அதில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
வெளிநாடுகளில் கட்டுமானத் தொழில் தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க பரிந்துரைக்கிறோம். அதற்காக தூதரகங்களுக்கு வழிகாட்டுகிறோம். ஏற்கனவே துபாய் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதில் தலையிட வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
இன்று நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் அடிப்படைப் பிரச்சனை டொலர் பற்றாக்குறை. நமது அமைச்சு டொலர் சம்பாதிக்கும் அமைச்சசு அல்ல. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அமைச்சு என்ற ரீதியில் எம்மால் என்ன செய்ய முடியும் என புதிதாக சிந்தித்தோம்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையானது இதுவரை 12 நடுத்தர வர்க்க வீட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன் கீழ், 3,667 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அதன்படி வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும் வெளிநாடுகளில் பணிபுரியும் எமது மக்களுக்கும் டொலர்களுக்கு வீடுகளை விற்பனை செய்யும் செயற்திட்டமொன்றை அறிமுகப்படுத்தினோம். இரட்டைக் குடியுரிமை மற்றும் நிரந்தர விசாவில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இந்த வீடுகளை வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும் நாங்கள் உழைத்தோம். நீங்கள் இந்த வீடுகளை டொலர்களில் வாங்கினால், நாங்கள் உங்களுக்கு 10மூ தள்ளுபடி தருகிறோம். இந்த நோக்கத்திற்காக, நாங்கள் ஒரு டொலர் கணக்கை அமைக்க நடவடிக்கை எடுத்தோம்.
கடந்த இரண்டு மாதங்களில் 06 வீடுகளை விற்பனை செய்துள்ளோம். இதன்படி இதுவரை 276,650 அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளன. விற்பனை செய்யப்பட்ட அனைத்து வீடுகளும் வியத்புர வீட்டுத் திட்டத்தில் உள்ளவை. துபாய், அமெரிக்கா, கனடா, கட்டார் போன்ற நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களே இவற்றை கொள்வனவு செய்துள்ளனர். வெளிநாடுகளில் உள்ள மேலும் 10 இலங்கையர்கள் இந்த வீடுகளை வாங்க விண்ணப்பித்துள்ளனர். அதற்கான செயல்முறை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் விற்பனையை முடித்து விடுவோம். அந்த 10 வீடுகளின் மதிப்பு 352,800 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
‘டொலர் வீடமைப்புத் திட்டம்’ மூலம் அடுத்த ஆண்டு 02 மில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை அடைவதே எமது இலக்காகும். வெளிநாட்டு குடிமக்களுக்கு இந்த வீடுகளை வாங்குவதற்கான வாய்ப்பை வழங்க முடிவு செய்தோம். அதற்காக இலங்கை மத்திய வங்கியின் பரிந்துரையின் பேரில் ஆரம்பிக்கப்படும் உள்நோக்கிய முதலீட்டுக் கணக்கை Inward Investment Account திறப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்த நாட்டிற்கு டொலர்களை கொண்டு வரும் முக்கிய துறை சுற்றுலா. நான் சுற்றுலா அமைச்சராக இருந்த காலத்தில், நாடு முழுவதும் 5000க்கும் மேற்பட்ட கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. சமூக வலைதளங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் மத்தியில் அவற்றை பிரபலப்படுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் தான் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களமும் உள்ளது. தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளில் 24 புதிய சுற்றுலாத் தளங்களை நாங்கள் புதிதாகக் கண்டறிந்துள்ளோம். கங்கை வாடி, புத்தளம் தடாகத் தீவுகள், வாய்க்கலை, சீதகல்ல போன்றவை சுற்றுலாத் தலங்களாகும். சுற்றுலாத் துறை அமைச்சகத்துடன் இணைந்து, இந்த சுற்றுலாத் தலங்களைப் பற்றி சுற்றுலாப் பயணிகளுக்குப் பரவலான விளம்பரம் அளிக்கும் திட்டத்தைத் தயாரித்து வருகிறோம்.
நமது நாட்டிற்குச் சொந்தமான 113 தீவுகள் உள்ளன. வடகிழக்கு பிராந்தியங்களில் மட்டும் 76 தீவுகள் உள்ளன. இந்த தீவுகளில் பல்வேறு சமூகங்கள் வாழ்கின்றன. அவர்கள் தங்கள் சொந்த துணை கலாச்சாரங்களைக் கொண்டுள்ளனர். இந்த தீவுகளை அபிவிருத்தி செய்வதற்காக தீவு அபிவிருத்தி அதிகாரசபை என்ற புதிய நிறுவனத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தேன். அந்த அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் கௌரவ அமைச்சர்கள் பல்வேறு அவதானிப்புகளை வெளியிட்டுள்ளனர். இந்த தீவுகளை அபிவிருத்தி செய்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் திட்டங்களை நடைமுறைப்படுத்தி நாட்டுக்கு டொலர்களை சம்பாதிப்பதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாக இருந்தது. அமைச்சரவையின் பரிந்துரைகளின்படி எதிர்காலத்தில் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.
நகர அபிவிருத்தி அதிகாரசபை 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 208 பிராந்திய சபைகள், நகர அபிவிருத்தி பிரதேசங்களாக பிரகடனப் படுத்தியுள்ளது. இந்தப் பிரதேசங்களில் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அதிகாரம் உள்ளது. பொதுவாக, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை;, நீர் வழங்கல் சபை போன்ற 26 நிறுவனங்கள் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளன. முன்னதாக, அத்தகைய அபிவிருத்தி அனுமதிக்கு ஒப்புதல் அளிக்க சுமார் ஒரு வருடம் ஆனது. இதன் காரணமாக இலங்கையில் முதலீடு செய்ய விரும்பிய முதலீட்டாளர்கள் நம்பிக்கையற்று போயினர். மேலும்,
இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய 117 சிறிய மற்றும் நடுத்தர நகர மையங்களைத் தெரிவுசெய்து அவற்றின் அடிப்படைப் பொதுத் தேவைகளை மேம்படுத்துவதற்கு நூறு நகரங்கள் திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்தினோம். அடையாளம் காணப்பட்ட 117 நகரங்களில் 116 நகரங்களில் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 110 நகரங்களில் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த திட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் இருக்கலாம். பிரச்னைக்குரிய பகுதிகளை கண்டறிந்து, எதிர்காலத்தில் அவற்றை சரிசெய்ய முயற்சிப்போம்.
புதிய திட்டங்களைத் தொடங்க வேண்டாம் என்று நான் எப்போதும் கூறுவேன். புழையவற்றின் நிதி கொடுப்பனவுகளை கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றே கூறினேன். அண்மையில் மன்னார் சென்றிருந்தேன். பாதியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் ஏராளம். அதன் மற்ற நிலைகளை செய்விக்க நிதி செலுத்த முடியாதுள்ளது. எனவே, இறுதிக் கொடுப்பனவுகளைச் செய்ய வேண்டிய வீடுகளின் எண்ணிக்கை குறித்து புள்ளிவிபரம் ஒன்றை வழங்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார். அரசின் நிதி என்பது மக்களின் பணம். இவை வீணாகப் போவதை அனுமதிக்க முடியாது. புதிய திட்டங்களை வகுத்த பிறகு நான் சண்டையிடப் போவதில்லை. வரலாற்றில் முன்னாள் அமைச்சர்கள் செய்த காரியங்கள் அதே பெயரில் செல்ல வேண்டும். புதிய விஷயங்களை விதிகளின்படி செய்ய வேண்டும் என்று நான் எப்போதும் கூறுவேன்.
அத்துடன், தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அபிவிருத்தித் திட்டங்களை அடுத்த வருட தொடக்கத்தில் மீள ஆரம்பிக்க முடியும் என நம்புகின்றோம். நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மீளும் வரை பொது வசதிகள் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த திறைசேரி நிதியைப் பயன்படுத்த நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதற்கு சுயநிதி முறையைப் பயன்படுத்துவோம் என்று நம்புகிறோம். இதற்காக தனியார் துறையை ஊக்குவிக்க எதிர்பார்க்கிறோம்.
மேலும், அந்தத் திட்டக் கடன் உதவித் திட்டங்கள் முடியும் வரை நான் புதிய வீட்டுக் கடன் உதவி அல்லது வீட்டுத் திட்டங்களைத் தொடங்கமாட்டேன். ஏற்கனவே உள்ள திட்டங்கள் நிறைவேறும் வரை புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த நான் தயாராக இல்லை.
ரணில் ராஜபக்ச அரசாங்கம் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம் சுமத்துகின்றனர். ராஜபக்ச ஆதரவாளர்கள்தான் இன்று ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கின்றனர். அதற்கு காரணம் ரணில் விக்கிரமசிங்க அல்ல. நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியின் காரணமாக. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து அரசியல் தலைவர்களையும் பொறுப்பை ஏற்குமாறு அழைப்பு விடுத்திருந்த வேளையில் திரு.சஜித் பிரேமதாச முன்வந்திருந்தால் இந்த அரசாங்கம் சஜித் ராஜபக்ச அரசாங்கம் என்றே அழைக்கப்பட்டிருக்கும்.
திரு அனுரகுமார திஸாநாயக்க முன்வந்திருந்தால், அனுர ராஜபக்ஷ ஒரு அரசாங்கத்தை அழைத்திருப்பார். முடியாது போனாலும் எமது அமைச்சர் டலஸ் ஜனாதிபதியானால் அது டலஸ் பிரேமதாச அரசாங்கமாக இருக்குமா என்று நான் கேட்க விரும்புகின்றேன். நாங்கள் பொதுவாக்கெடுப்புடன் வந்த குழு. கட்சித் தலைமை வெளியேறியதும் பதவிகளை எடுப்பதில்லை என முடிவு செய்தோம். அதனால்தான் எதிர்க்கட்சிக்கு வந்து இதை ஏற்கச் சொன்னார்கள்.