போய் வா தம்பி! தமிழ் நடிகர் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்ட சூரி


பிரபல நகைச்சுவை நடிகர் ஹரி வைரவன் மறைவு குறித்து நடிகர் சூரி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


வெண்ணிலா கபடிக் குழு அறிமுகம்

தமிழில் வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஹரி வைரவன், நள்ளிரவு 12.15 மணியளவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

அவரது மரணம் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹரி வைரவனின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சூரி இரங்கல் பதிவு

இந்த நிலையில் நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில்,

‘இன்று காலை தம்பி வைரவனின் மறைவு செய்தி கேட்டு பெரும் துயர் கொண்டேன். பிரிவின் மீளா துயரில் தவிக்கும் குடும்பத்தாருக்கு அந்த ஆத்தா மீனாட்சி எல்லா தைரியத்தையும் தர வேண்டுகிறேன். போய் வா தம்பி’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

சூரியுடன் வெண்ணிலா கபடி குழு, குள்ளநரிக் கூட்டம், நான் மகான் அல்ல, வேலாயுதம் ஆகிய படங்களில் ஹரி வைரவன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் நடிகர் விஷ்ணு விஷால் தனது இரங்கல் பதிவில், ‘உனது மறைவு வருத்தமளிக்கிறது வைரவன். உனது ஆன்மா சாந்தியடையட்டும். வெண்ணிலா கபடிகுழுவின் உங்களுடன் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்’ என தெரிவித்துள்ளார்.  

போய் வா தம்பி! தமிழ் நடிகர் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்ட சூரி | Actor Soori Vishnu Tweet For Hari Vairavan Death

மதுரை மாவட்டம் கடச்ச நேந்தலில் ஹரி வைரவனின் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

போய் வா தம்பி! தமிழ் நடிகர் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்ட சூரி | Actor Soori Vishnu Tweet For Hari Vairavan Death

போய் வா தம்பி! தமிழ் நடிகர் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்ட சூரி | Actor Soori Vishnu Tweet For Hari Vairavan Death



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.