புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 2022-ம் ஆண்டுக்கான மாநில விருதுகளை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது,
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். சில நேரங்களில் உதவித்தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவது உள்ளிட்ட ஒருசில குறைகள் இருக்கின்றன.இனி வரும் காலங்களில் இது போன்று இல்லாமல், முதியோருக்கு உரிய நேரத்தில் உதவித்தொகை வழங்குவதுபோல் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.
சமூக நலத்துறை மூலம் நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மற்றவர்களுக்கு வழங்கும் உதவித் தொகையை விட மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 25 சதவீதம் உதவித்தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
எங்களுடைய அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய அனைத்து திட்டங்களையும் சிறப்பான முறையில் சரியான நேரத்தில் செய்து கொடுக்கும் என்று தெரிவித்தார்.