
இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் 138 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
பீகார் மாநிலம் ஜிராதேய் என்ற இடத்தில் 1886 ஆம் ஆண்டு ராஜேந்திர பிரசாத் பிறந்தார். ஜனவரி 26, 1950 முதல் மே 13, 1962 வரை நாட்டின் முதல் குடியரசு தலைவராக பணியாற்றினார். மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் ராஜேந்திர பிரசாத்.
இந்நிலையில், முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், டாக்டர் ராஜேந்திர பிரசாத்ஜியை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்வதாக குறிப்பிட்டுள்ளார். தைரியத்தையும், அறிவார்ந்த ஆற்றலையும் வெளிப்படுத்திய பழம்பெரும் தலைவர் ராஜேந்திர பிரசாத் என்று மோடி தெரிவித்துள்ளார்.
Remembering Dr. Rajendra Prasad Ji on his birth anniversary. A legendary leader, he epitomised courage and scholarly zeal. He was firmly rooted in India’s culture and also had a futuristic vision for India’s growth.
— Narendra Modi (@narendramodi) December 3, 2022
இந்தியாவின் கலாச்சாரத்தில் உறுதியாக வேரூன்றியவர் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான எதிர்கால பார்வையையும் கொண்டிருந்தவர் ராஜேந்திர பிரசாத் என்று மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
newstm.in