முல்லை பெரியாறு அணை : ஆய்வு திடீர் ரத்து? – விளக்கம் அளிப்பாரா ஸ்டாலின்…!

முல்லை பெரியாறு அணையில் நீர் தேக்குவது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சரான ஆர்.பி. உதயகுமார்,  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ரூர்கர்வ் அட்டவணைப்படி, நவம்பர் 30க்கு பின் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக தேக்கலாம் என்று கூறப்படும் நிலையில், ஓரிரு நாளிலே அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்ட உள்ளது. 

எனவே, நீர்மட்டத்தை 142 அடியாக தேக்க நடவடிக்கை எடுப்பதற்கும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெற்றுத் தந்த அந்த ஜீவாதார உரிமையை காப்பதற்கும் திமுக அரசு முன்வர வேண்டும். உச்ச நீதிமன்றம் அமைத்த கண்காணிப்பு குழுவினர் நாளைய (டிச. 4) தினம், அணைப்பகுதியில் ஆய்வு செய்வதாக தெரிவிக்கப்பட்ட நிலையிலே, அந்த ஆய்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது.

மதுரை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களிலேயே குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீர் ஆதாரமாக விளங்குவது, முல்லை பெரியார். முல்லைப் பெரியாறு அணை, 1895ஆம் ஆண்டு ஜான் பென்னிகுவிக் என்பவரால் கட்டப்பட்ட இந்த அணை 155 அடியாகும். 1979 ஆம் ஆண்டில் மரமத்து பணிகளுக்காக, அணையின் நீர்மட்டத்தை தற்காலிகமாக 136 அடியை குறைக்கபட்டது. 

1980ஆம் ஆண்டு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு முயற்சி செய்தபோது, கேரள அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. 2014ஆம் ஆண்டு இறுதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை உடனடியாக 142 அடி வரை உயர்த்தி கொள்ளலாம் என்று  விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கிற அந்த வரலாற்று தீர்ப்பை, ஜெயலலிதா பெற்று தந்ததற்காக மதுரையிலே நன்றி அறிவிப்பு மாநாடு நடந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.