தனோடியா: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி , மத்தியப் பிரதேசம், அக்ர மால்வா மாவட்டத்தில் உள்ள தனோடியா நகரில் நேற்று தேசிய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார்.
இந்தூரைச் சேர்ந்த சர்வமித்ரா நசன் என்பவர் ராகுலுக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பு அளிக்க முடிவு செய்தார். இதற்காக தான் வளர்க்கும் லிசோ மற்றும் ரெக்சி என்ற 6 வயது லெப்ரேடர் வகை நாய்களுக்கு பூக்கூடை கொடுத்து வரவேற்பு அளிக்கும் வகையில் பயிற்சி அளித்தார்.
தனோடியா நகரில் நேற்று காலை யாத்திரையில் ஈடுபட்ட ராகுல், தேநீர் இடைவெளி நேரத்தில் சற்று ஓய்வு எடுத்தார். அப்போது அங்கு தனது இரண்டு நாய்களுடன் வந்தார் சர்வமித்ரா நசன். லிசோ மற்றும் ரெக்சி என்ற அவரது இரண்டு நாய்களும் ராகுல் காந்திக்கு பூக்கூடை வழங்கி வரவேற்பு அளித்தன. அந்த கூடையில், ‘வெறுப்பை கைவிட்டு நாட்டை ஒன்றிணைப்போம்’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.