
ஸ்வேதா பண்டேகரின் காதலர் இவர் தான்? – திருமண தேதியுடன் மீண்டும் சர்ப்ரைஸ்
நடிகை ஸ்வேதா பண்டேகர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ஆக்டிவாக நடித்து வருகிறார். அவர் நடித்து வந்த சூப்பர் ஹிட் சீரியலான 'சந்திரலேகா' 8 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி அண்மையில் தான் நிறைவுற்றது. இரு தினங்களுக்கு முன் ஸ்வேதா தனது காதல் அப்டேட்டை சஸ்பென்ஸூடன் வெளியிட்டிருந்தார். இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் ஸ்வேதா மட்டும் முகம் காண்பித்திருக்க, அவரது காதலர் பின்னால் திரும்பிய படி நின்றிருந்தார்.
இதனையடுத்து பலரும் ஸ்வேதாவின் காதலர் யார் எனக் கேட்டு நச்சரித்து வந்தனர். தற்போது ஸ்வேதாவின் காதலர் யார் என்பது அவர் வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் தெரிந்துவிட்டது. அவர் வேறு யாருமில்லை பிரபல வீஜே மற்றும் நடிகரான மால் மருகன் தான். அத்துடன் அந்த புகைப்படத்தில் ஸ்வேதா – மால் மருகனின் திருமணம் வருகிற டிசம்பர் 4ம் தேதி நடைபெற உள்ள தகவலும் தெரியவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மீண்டும் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஸ்வேதா – மால் மருகனின் திருமணத்திற்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.