தமிழக மின்வாரியம் வீடுகள் உள்ளிட்ட இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கும் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் மின்வாரியத்தின் இணையதள மூலம் ஆதார் எண் இணைக்கப்பட்டு வந்த நிலையில் சில இடங்களில் சர்வர் கோளாறு மற்றும் காலதாமதம் ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய இணையதளத்தை நேற்று வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் ஆதார் எண்ணை இணைக்க மட்டும் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையத முறையை முகவரியை வெளியிட்டுள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 2.68 கோடி மின் நுகர்வோர்களில் நேற்று மாலை வரை 51 லட்சம் மின்னிணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். நீங்களும் உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.