மகாராஷ்டிரா மாநிலத்தில் இரட்டை சகோதரிகளை ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளைக்கு இறுதியில் துயரம் சம்பவம் நேர்ந்துள்ளது.
சோலாப்பூர் மாவட்டத்தில் மல்ஷிராஸ் தாலுகாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வினோத திருமணம் நடைபெற்றது. மணமகன் இருவரும் மும்பையைச் சேர்ந்த ஐடி ஊழியர்கள்.
இரட்டை சகோதரிகள் மற்றும் மணமகனின் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையடுத்து, வீடியோவின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 494வின் கீழ் அக்லுஜ் காவல் நிலையத்தில் மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணமகன் திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in