குஜராத்தில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு; தாயிடம் ஆசி வாங்கிய பிரதமர்.!

குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான இங்கு, கடந்த 24 ஆண்டுகளாக, பாஜக ஆட்சிக் கட்டிலில் உள்ளது. இந்தநிலையில் 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5ம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி கடந்த 1ம் தேதி குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 19 மாவட்டங்களை சேர்ந்த 89 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இதில் சூரத், ராஜ்கோட், பவ்நகர், ஜாம்நகர் ஆகிய முக்கிய நகரங்கள் அடங்கும். 14 சீட்கள் பழங்குடியின சமூகத்திற்கும், 7 சீட்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கும் ஒதுக்கப்பட்டன. மொத்தம் 788 வாக்காளர்கள் களத்தில் நின்றனர். அதில் 70 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கடந்த 1ம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில், சரியாக இன்று காலை 8 மணிக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. முதல்கட்ட வாக்குப்பதிவிற்காக 25,430 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்கு செலுத்தினர். முதல்கட்ட வாக்குப்பதிவில் 60.20% பேர் வாக்கு செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், முதல்கட்ட தேர்தல் நடந்த 89 தொகுதிகளில் பாஜக 48,
காங்கிரஸ்
38, பாரதிய பழங்குடியின கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.

மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 140 இடங்களை கைப்பற்றி குஜராத்தில் புதிய வரலாற்றை படைக்க வேண்டும் என்று பாஜகவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்முறை பாஜக மிகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்திருக்கிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், மாநில தலைவர்கள் ஆகியோர் பொதுக்கூட்டங்கள், பேரணி என தொடர்ந்து மும்முரம் காட்டினர்.

ஆனால் குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸின் ஈடுபாடு பெரிதாக இல்லை என்று சொல்லப்படுகிறது. கடந்த முறை ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் செய்த நிலையில், இம்முறை இந்திய ஒற்றுமை பயணத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் காங்கிரஸ் முடிவுகள் எப்படியிருக்குமோ? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆம் ஆத்மி கட்சி களத்தில் இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்தநிலையில் குஜராத்தில் நாளை இரண்டாம் கட்ட வாக்குபதிவு நடைபெற உள்ளது. குஜராத்தின் 14 மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் உள்ள 93 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி நாளை வாக்கு செலுத்த உள்ள நிலையில், அவர் இன்று அகமதாபாத் சென்றுள்ளார்.

தான் இறந்துவிட்டதாக காட்ட கொலை; உத்தரபிரதேச பெண் பரபரப்பு வாக்குமூலம்.!

சொந்த ஊருக்குச் சென்ற பிரதமர் மோடி, குஜராத்தில் வெற்றி பெற தனது தாயாரிடம் ஆசி பெற்றார். நாளை நடைபெற உள்ள தொகுதிகளில், கடந்த 2017ம் ஆண்டு 51 இடங்களில் பாஜகவும், 39 இடங்களிலும் காங்கிரஸும் மற்ற மூன்று இடங்களில் சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.