சொந்த மகள் உட்பட 20 பெண்களை திருமணம் செய்த நபர்… தீர்க்கதரிசி என அடையாளப்படுத்தியவரின் அதிர்ச்சி பின்னணி

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் 9 வயது சிறுமி உட்பட 20 பெண்களை திருமணம் செய்துகொண்ட நபர் தொடர்பில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

தீர்க்கதரிசி என கூறி வருபவர்

குறித்த நபர் டிரெய்லர் ஒன்றில் தமது மனைவிகள் அனைவரையும் அழைத்துச் செல்லும் நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
46 வயதான Samuel Rappylee Bateman என்பவரே தம்மை ஒரு தீர்க்கதரிசி என கூறி வருபவர்.

சொந்த மகள் உட்பட 20 பெண்களை திருமணம் செய்த நபர்... தீர்க்கதரிசி என அடையாளப்படுத்தியவரின் அதிர்ச்சி பின்னணி | Arizona Prophet Twenty Wives His Own Daughter

@AP

இவர் 9 வயது சிறுமி உட்பட 20 பெண்களை திருமணம் செய்துகொண்டு, ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.
செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட இவர் தொடர்பில் விசாரணை அதிகாரிகள் தற்போது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

இவர் மீது சிறார்களை கடத்துதல், சிறுமிகளுடன் உறவு வைத்துக்கொள்தல் உட்பட பல பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
தம்மை ஒரு தீர்க்கதரிசி என அடையாளப்படுத்தி வந்துள்ள Bateman முதன்முதலில், 2019ல் தமது மகளை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சொந்த மகள் உட்பட 20 பெண்களை திருமணம் செய்த நபர்... தீர்க்கதரிசி என அடையாளப்படுத்தியவரின் அதிர்ச்சி பின்னணி | Arizona Prophet Twenty Wives His Own Daughter

@AP

சிறார்கள், பெண்கள் என 20 மனைவிகள்

இவரது அமைப்பில் 50 பேர்கள் இணைந்துள்ளதாகவும், 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் மற்றும் பெண்கள் என 20 மனைவிகளும் இவருக்கு உள்ளதாகவும் பலர் சாட்சியப்படுத்தியுள்ளனர்.

மேலும், தமது அமைப்பில் இணைந்துள்ள மூன்று இளைஞர்களுக்கு தமது மகள்களை விருந்தாக்கியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த ஆகஸ்டு மாதத்தில் தான் முதன்முதலில் Bateman பொலிசாரின் பார்வையில் சிக்கியுள்ளார்.

சொந்த மகள் உட்பட 20 பெண்களை திருமணம் செய்த நபர்... தீர்க்கதரிசி என அடையாளப்படுத்தியவரின் அதிர்ச்சி பின்னணி | Arizona Prophet Twenty Wives His Own Daughter

@Court

இவரது வாகனத்தை சோதனையிட்ட பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குறித்த டிரெய்லர் வாகனத்தில் சிறார்கள் உட்பட பல பெண்கள் இருந்துள்ளனர்.
11 முதல் 14 வயதுடைய மூன்று சிறுமிகளும் அந்த டிரெய்லர் வாகனத்தில் பயணம் செய்துள்ளனர்.

இந்த நிலையில், சிறார் துஸ்பிரயோக வழக்கில் அரிசோனா பொலிசாரால் Bateman கைது செய்யப்பட்டார்.

சொந்த மகள் உட்பட 20 பெண்களை திருமணம் செய்த நபர்... தீர்க்கதரிசி என அடையாளப்படுத்தியவரின் அதிர்ச்சி பின்னணி | Arizona Prophet Twenty Wives His Own Daughter

@AP

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.