திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு பணிகள் குறித்து நேற்று முன்தினம் 2-வது நாளாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். முன்னதாக அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக அவர் கிரிவலப்பாதையில் ஓடினார்.
சாதாரணமாக பக்தர்கள் நடந்து சென்றால் கிரிவலப் பாதையை சுற்றி முடிக்க குறைந்தது 3 மணி நேரம் ஆகும். ஆனால் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையை டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஒரு மணி நேரம் 52 நிமிடத்தில் ஓடி முடித்து உள்ளார். இந்த தகவலை அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் அதில் காவல் துறையில் இன்னும் வேகமாக ஓடுபவர்கள் உள்ளனர் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.