துணிவு படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது. துணிவு படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், சிபி சக்கரவர்த்தி, அமீர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் அதிக தாடியுடன், வெள்ளை நிற முடியுடனும் நடித்து வந்தார். அந்த தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது.
கடந்த ஒரு ஆண்டு காலமாக அதே தோற்றத்தில் நடிகர் அஜித் வலம் வந்தார். இந்த நிலையில் க்ளீன் சேவ் செய்த அஜித்குமாரின் தோற்றம் சமீபத்தில் வைரலானது இதன் மூலம் கடந்த ஒரு ஆண்டுள் கழித்து தன்னுடைய தோற்றத்தை அஜித்குமார் மாற்றினார்.
அதற்கான புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக துணிவு படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
போஸ்டரில் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு அஜித் மாஸாக இருக்கிறார். அஜித்தின் புதிய ஸ்டில்லை அவரது ரசிகர்கள் ட்ரெண்டு செய்து வருகின்றனர்.
newstm.in