மதுரை: ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி –அலாரம் அடித்ததால் தப்பிய பணம்

மதுரையில் நள்ளிரவில் ஏடிஎம் மிஷினை உடைத்து திருட முயன்று அலராம் அடித்ததால் தப்பியோடிய இளைஞர். சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது இந்நிலையில், நேற்று நள்ளிரவு ஹெல்மெட் அணிந்தபடி ஏடிஎம்-ல் புகுந்த இளைஞர் ஒருவர் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளார்.
image
அப்போது ஏடிஎம் மையத்தில் உள்ள அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து இளைஞர் தப்பியோடியுள்ளார். இதனால் ஏடிஎம் மெஷினில் இருந்த பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த சமயநல்லூர் போலீசார், ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளியை தேடி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.