திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்த அமரம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் இருபத்தேழு வயதுடைய இளைஞர் சரவணன். இவர் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் வழக்கம் போல் வேலைக்கு அமரம்பேடு பகுதியில் இருந்து சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஐயர் கண்டிகை அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் லாரியில் மோதி விபத்துக்குள்ளானார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால், அவர் இன்று காலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.