மயிலாடுதுறை மாவட்டத்தை அடுத்த தரங்கம்பாடி தாலுக்கா வானகிரி மீனவ கிராமத்தில் பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று வருகை புரிந்தார்.
அவருக்கு கிராமத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வருகை புரிந்ததால் மயிலாடுதுறை மாவட்ட டிஎஸ்பி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கோவிலுக்குச் சென்ற துர்கா ஸ்டாலினுக்கு சிவாச்சாரியார்கள் பூரண கும்பம் மரியாதை கொடுத்து வரவேற்றனர். இதனை அடுத்து கோவிலில் அமைந்துள்ள ரேணுகாதேவி, எல்லையம்மன் தெய்வங்களை பயபக்தியுடன் துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்தார்.
பின்னர் கோவிலில் குடியிருந்த பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்பொழுது துர்கா ஸ்டாலின் உடன், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் சீர்காழி யூனியன் சேர்மன் கமலஜோதி ஆகியோர் உடன் இருந்தனர்.