சென்னை: நலத்திட்ட உதவிகள் வழங்கவும், திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், வரும் 8-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி செல் கிறார்.
டெல்லியில் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டு ஆயத்தப் பணிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அதன்பின், நேற்று இரவே அவர் சென்னை திரும்பினார்.
தொடர்ந்து, 7-ம் தேதி (நாளை) இரவு ‘பொதிகை எக்ஸ்பிரஸ்’ ரயிலில் தென்காசி புறப்பட்டுச் செல்கிறார். 8-ம் தேதி காலை குற்றாலத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், தென்காசியில் பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கு கிறார்.
தொடர்ந்து, அன்றிரவு மதுரை வரும் முதல்வர், 9-ம் தேதி மதுரை மாநகராட்சி அலுவலக புதிய நுழைவு வாயிலை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, மதுரை விமான நிலையம் அருகில் உள்ள புதுப்பிக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை திறந்து வைத்துவிட்டு சென்னை திரும்புகிறார்.