அவதூறு பரப்பியதாக புகார் : பார்வதி வீட்டு பணியாளர் மீது வழக்கு பதிவு

என்னை அறிந்தால், நிமிர்ந்து நில், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பார்வதி நாயர். சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த அக்டோபர் 19ம் தேதி இரவு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் தனது வீட்டில் பணியாற்றிய சந்திரபோஸ் தனது வீட்டில் இருந்த 6 லட்சம் ரொக்கம், 3 லட்சம் மதிப்புள்ள வாட்ச் 50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாக் ஆகியவற்றை திருடி விட்டதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த புகார் குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் சுபாஷ் சந்திரபோஸ், பார்வதி நாயரின் சில தனிப்பட்ட நடவடிக்கைகள் நான் பார்த்து விட்டதால் அதுபற்றி வெளியில் சொல்லிவிடுவேன் என்று பயந்து என்மீது பொய் புகார் அளித்துள்ளார். என்னை அடித்து துன்புறுத்தினார், என்று அவரும் புகார் அளித்தார். தற்போது இரு புகார்களையும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பார்வதி நாயர், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் சுபாஷ் சந்திரபோஸ் மீது புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் சுபாஷ் சந்திரபோஸ், என் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், யு-டியூப் சேனல்களில், தான் வீட்டில் ஆண் நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்ததாகவும், அதை அவர் பார்த்ததால் அவர் மீது நான் திருட்டு பட்டம் கட்டியதாக பொய்யான தகவல்களை கூறி வருகிறார். இதனால் நான் மிகவும் மனமுடைந்த நிலையில் இருக்கிறேன். நடக்காத சம்பவத்தை நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை கூறி வரும் சுபாஷ் சந்திர போஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் சுபாஷ் சந்திரபோஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.