உயிரை பணயம் வைத்து செல்ஃபி.. கோவை கல்லூரி மாணவிகளின் அட்டூழியம்.! 

கோவையிலிருந்து அன்றாடம் மேட்டுப்பாளையத்திற்கு நிறைய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் மாணவ, மாணவிகள் அனைவரும் கோவையில் இருக்கும் கல்லூரிகளுக்கு வந்து செல்ல இந்த ரயில்களை தான் பயன்படுத்துகின்றனர் 

அத்துடன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கல்லூரி மாணவிகள் சிலர் செய்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவையை நோக்கி ரயில் சென்ற போது அந்த ரயிலில் இருக்கும் ஒரு பெட்டியில் மூன்று கல்லூரி மாணவிகள் பயணித்துள்ளனர். அவர்கள் திடீரென்று படிக்கட்டு பகுதிக்கு அருகில் வந்து ஒற்றை கையில் அந்த கம்பியை பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர்.

செல்பி எடுத்தது மட்டுமல்லாமல் ஒரு மாணவி மற்ற இரண்டு பேரையும் புகைப்படம் எடுத்தார். ரயில் வேகமாக பயணிக்கும் போது ஆபத்தை உணராமல் படியில் பயணித்தவாறு அவர்கள் செல்பி எடுத்த சம்பவம் மற்ற பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.