கணவர்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம் – மேடையில் சுந்தர்.சி… தமிழிசை கலகலப்பு!

பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மருத்துவம், கலை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாட பிரிவுகளில் பயின்று முடித்த 2,241 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. 

இதில், அந்த பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஏசி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

அவர், இந்திய மருந்தக கவுன்சில் மோண்டு பட்டேல், திரைப்பட இயக்குனர் சுந்தர் சி, விஜிபி குழும தலைவர் சந்தோஷம், லைக்கா மருத்துவ குழும தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். 

அப்போது அவர் பேசுகையில்,”ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார் என்பது பெருமை. வெளியுலகில் பிரபலமாக இருக்க கூடிய மனைவிக்கு கணவராக இருப்பதற்கே டாக்டர் பட்டம் வழங்கலாம். எனது உயர்வுக்கு மூன்று ரகசியம் சொல்வேன். 

முதல் ரகசியம், கடுமையான உழைப்பு. இரண்டாவது ரகசியம், கடுமையான உழைப்பு. மூன்றாவது ரகசியம், கடுமையான உழைப்பு. உழைப்பு இல்லாமல் எந்த துறையிலும் முன்னேற முடியாது. அம்மா, அப்பாவிடமும் அன்பாக இருக்க வேண்டும். இந்திய விஞ்ஞானிகள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் 150 நாடுகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் இளம் வயது ஆளுநர் நான்தான். புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தை எப்படி கையாளுவார் என விமர்சனம் செய்தனர். அதனை கையாண்டு மேலும் புதுச்சேரி பொறுப்பு ஆளுநராகவும் நியமனம் செய்தார்கள்.https://zeenews.india.com/tamil/topics/Puducherry

நான் மகப்பேறு மருத்துவர். ஒரு குழந்தை மட்டுமல்ல இரண்டு குழந்தையையும் கையாளுவேன் என என்னை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்தேன்” என்றார். மேலும்,  கல்லூரி மாணவர்கள் மத்தியில் கலகலப்பாகவும் நகைச்சுவையுடனும் பேசியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.