Parliament Winter session: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 16 புதிய மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவை (மேல்சபை) அதிகாரபூர்வ தலைவராக குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தங்கர் தனது பணிகளை இன்று முதல் தொடன்க்குகிறார். பிரதமர் நரேந்திர மோடி கூட்டத் தொடரின் முதல் நாளில் செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மக்களவை செயலக அறிக்கை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 06, 2022) தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு உயிரிழந்த தலைவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்துவதுடன் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.
முதல் நாளில் பல மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 2002க்கான மசோதாவை அறிமுகப்படுத்துகிறார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் 360வது அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து, பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிக்கை வெளியிடுவார். அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தொடர்பான மானியங்கள் விவகாரமும் விவாதத்திற்கு வரலாம்.
சுரங்கத் துறை அமைச்சர் தன்வே ராவ்சாகேப் தாதாராவ், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அனுப்ரியா சிங் படேல், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஜவுளித் துறையைச் சேர்ந்த தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் மற்றும் வர்த்தகத்தைச் சேர்ந்த சோம் பிரகாஷ் ஆகியோர் தொடக்க நாளில் ஆவணங்களை சமர்ப்பிப்பார்கள். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் சமீபத்திய முன்னேற்றங்கள்’ குறித்தும் அறிக்கை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்கப்படுகிறது.
கடலில் கடற்கொள்ளையர்களை ஒடுக்குவதற்கும், கடற்கொள்ளையர் குற்றத்துக்கு தண்டனை வழங்குவதற்கும், அதனுடன் தொடர்புடைய அல்லது தற்செயலான விஷயங்களில் கவனத்தில் கொள்ளப்படுவதற்கும் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கான மசோதாவையும் அவர் முன்வைப்பார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், இன்று (டிசம்பர் 07, செவ்வாய்க்கிழமை) தொடங்கி டிசம்பர் 29 வரை 23 நாட்கள் 17 அமர்வுகளுடன் நடைபெறும்.
கோவிட் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாலும், கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகள் இல்லாமல் அமர்வு கூடும் என்று தெரிகிறது.