Year in search 2022 : இதையெல்லாமா தேடுவீர்கள்… இந்தியர்களின் அதிக கூகுள் தேடல்கள்!

Year in Google search 2022 : ஒவ்வொரு ஆண்டும், அந்த ஆண்டின் இறுதியில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவை குறித்த பட்டியல்கள் வெளியிடப்படும். அனைத்து நாடுகளை சேர்த்து ஒட்டுமொத்தமாகவும், ஒவ்வொரு நாடாகவும் அதன் தகவல்களை வெளியிடும். அந்த வகையில், இந்தியாவின் அதிக தேடல்களை கூகுள் வெளியிட்டுள்ளது. அதன்மூலம், இந்திய மக்களின் முக்கிய தேவை, அவர்களின் மனநிலை, ரசனை, டிரெண்ட் ஆகியவற்றை புரிந்துகொள்ள முடியும். 

அந்த வகையில்தான், இந்த ஆண்டிற்கான “Year In Search 2022” அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்த இந்தாண்டில் அதிகம் தேட்டப்பட்டவை குறித்து தகவல்கள் இடம்பெற்றுள்ளது.  கடந்தாண்டு கரோனா தொடர்பாகவே பலரும் கூகுளில் தேடி வந்த நிலையில், இந்த ஆண்டு அந்த நிலை மாறியுள்ளது தெரியவந்துள்ளது. அதற்கு மாறாக இந்தாண்டு  பொழுதுபோக்கு, விளையாட்டு உள்ளிட்ட மற்ற தலைப்புகளின்கீழ் தான் அதிக தேடல்கள் இருந்துள்ளன. 

அதன்படி, இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் டி20 தொடர்தான், இந்தியாவின் ஒட்டுமொத்த தேடல்களிலும் முதலிடத்தில் இருந்துள்ளது. மேலும், விளையாட்டு சார்ந்த தேடல்களிலும் அது முதலிடத்திலேயே நீடிக்கிறது.  அதுபின்னர், கரோனா தடுப்பூசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான CoWIN தேடல்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளன. இதில், தான் கரோனா தடுப்பூசி குறித்த தகவல்களும், அதன் சான்றிதழ்களும் வழங்கப்படும். 

இதையடுத்து, கடந்த நவம்பர் 20ஆம் தேதி, கத்தாரில் தொடங்கிய பிபா உலகக்கோப்பை தொடர் 2022, ஒட்டுமொத்தமாக மூன்ராவது இடத்தை பிடித்துள்ளது. இன்னும், பிபா உலகக்கோப்பை தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

ஆசிய கோப்பை, ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை ஆகியவை முறையே நான்காவது, ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இவை இரண்டும் கிரிக்கெட் சார்ந்த தொடர்கள் என்றாலும், இரண்டிலும் இந்திய அணி படுதோல்வி அடைந்திருந்தது. 

ஆறாவது இடத்தில், இந்தியில் வெளியான ரன்பீர் கபூர், ஆலியா பட் நடித்த பிரம்மாஸ்திர படம் பிடித்துள்ளது. கன்னட திரைப்படம் தரவரிசையில் 9ஆவது இடத்தை பிடித்துள்ளது. மேற்கூறிய படங்கள்தான், அதிக அளவில் தேடப்பட்ட படங்களாகும். 

‘Near Me’ தேடல்கள் 

நாம் அனைவரும் நமக்கு அருகில் இருக்கும் சேவைகள், இடங்களை கண்டுபிடிக்க Near Me என்ற சொல்லை கூகுளில் அதிகம் தேடியிருப்போம். அதபோல, கடந்தாண்டு Covid Vaccines Near me என்பது அதிக அளவு தேடப்பட்டிருந்தது.

அதேபோன்று இந்த ஆண்டு தடுப்பூசி குறித்து தேடப்பட்டாலும், “swimming pool near me”, “water park near me”, “movies near me” போன்றவை அதிக தேடல்களாக இருந்துள்ளது. கூடவே, “COVID test near me”, “Oxygen cylinder near me”, and “COVID hospital near me” என்ற தேடல்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

முன்னிலையில் அக்னிபாத்

அதைபோன்று, ஒரு விஷயத்தை குறித்து அறிந்துகொள்ள How to என்ற சொல்லை அதிகம் பிரயோகித்திருப்போம். அந்த வகையில், இந்த முறை மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபாத் (Agneepath) திட்டம் குறித்துதான் பலரும் அறிந்துகொள்ள கூகுளில் தேடியுள்ளனர். இதையடுத்து, The NATO என்றால் என்ன என்பதை அதிகம் தேடியுள்ளனர். ரஷ்ய – உக்ரைன் போரினால் நேட்டோ படை குறித்த தேடல் எழுந்துள்ளது. இதையடுத்து, கருப்பு பூஞ்சை தொற்று குறித்தும் அதிகம் தேடப்பட்டுள்ளது. 

அதிகம் தேடப்பட்ட ஆளுமைகளில், முகமது நபி குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நுபுர் சர்மா முதலிடத்தில் உள்ளார். அவருக்கு பின்னர்தான், இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், லலித் மோடி, சுஷ்மிதா சென் ஆகியோர் ஆளுமைகளின் பட்டியலில் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Searches, What is, How to, Movies, Near me, Sports events, People, News Events, Recipes ஆகிய 9 தலைப்புகளின்கீழ் அதிக தேடப்பட்டவைகளின் முதல் 10 தேடல்களை கூகுள் அறிவித்துள்ளது. இதுகுறித்து முழுமையான பட்டியலை காண இதனை கிளிக் செய்யவும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.