குருத்வாராவுக்கு மன்னர் மூன்றாம் சார்லஸ் விஜயம்: சிறப்பான கோவிட் தொண்டுக்கு பாராட்டு



பிரித்தானியாவின் பன்முகத்தன்மைக்கு தலை வணங்கும் விதமாக, லூடன் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள குருநானக் குருத்வாரா கோயிலில் மன்னர் மூன்றாம் சார்லஸ் பார்வையிட்டார்.

குருத்வாராவில் மன்னர் சார்லஸ்

பிரித்தானியாவின் பன்முகத்தன்மையை போற்றும் விதமாக லண்டனுக்கு சற்று வெளியே உள்ள லூடன் நகரில் புதிதாக கட்டப்பட்ட குருத்வாராவுக்கு மன்னர் சார்லஸ் பக்தர்களுடன் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தினார்.

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் வருகையை முன்னிட்டு பல்வேறு வேற்று மதங்களை சேர்ந்த குழந்தைகள் கையில் யூனியன் ஜாக் மற்றும் ‘நிஷான் சாஹிப்’ என்ற சீக்கியக் கொடியை ஏந்தி வரவேற்க வந்திருந்தனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அரச குடும்பத்தின் அதிகாரிகள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

அத்துடன் குருத்வாராவில் வாரத்தில் ஏழு நாட்களும், வருடத்தின் 365 நாட்களும் சூடான சைவ உணவை வழங்கும் லூடன் சீக் சூப் கிச்சன் ஸ்டாண்டை நடத்தும் தன்னார்வலர்களையும் மன்னர் மூன்றாம் சார்லஸ் சந்தித்தார்.

கோவிட் கால சேவைகளுக்காக பாராட்டு

கடந்த மூன்று ஆண்டுகளாக கோவிட் தொற்றுக்கு எதிராக சீக்கிய சமூகத்தின் சேவைகளுக்காக மன்னர் மூன்றாம் சார்லஸ் அவர்களை பாராட்டினார்.

தடுப்பூசி தயக்கம் தொடர்பான தவறான தகவல்களை சமாளிக்க குருத்வாரா மற்ற வழிபாட்டு தலங்களை ஊக்குவித்தது என்று சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் 5 லட்சத்திற்கும் அதிகமான சீக்கியர்கள்  உள்ளனர். அவர்கள் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 1 சதவிகிதம் உள்ளனர். UK பாராளுமன்றத்தில் பல சீக்கிய உறுப்பினர்கள் உள்ளனர், தொழிலாளர் கட்சியின் தன்மன்ஜித் சிங் தேசி தற்போது முக்கிய எம்.பி.க்களில் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.