திருமலை: காக்கிநாடாவில் ரயிலில் இருந்து இறங்கும்போது கால் தவறி நடைமேடைக்கும் ரயில் பெட்டிக்கும் இடையே சிக்கிய கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள அன்னவர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகலா(20), கல்லூரி மாணவி. இவர் தினமும் ரயிலில் கல்லூரிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் சகிகலா வழக்கம் போல் குண்டூர்- ராயகடா விரைவு ரயிலில் ஏறி துவ்வாடாவிற்கு வந்தார்.
அப்போது, ரயில் நிற்பதற்குள் சகிகலா இறங்க முயன்றார். இதில் கால் தவறி ரயில் பெட்டிக்கும் நடைமேடைக்கும் நடுவில் விழுந்து சிக்கிக் கொண்டார். நடைமேடையின் ஒரு பகுதியை உடைத்து 1.30 மணிநேரம் போராடி சசிகலாவை பத்திரமாக மீட்டனர். உடனடியாக காயமடைந்த சசிகலாவை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சசிகலா நேற்று உயிரிழந்தார்.