பெண் விளையாட்டு வீரருக்காக… ரஷ்யாவின் மரணத்தின் வியாபாரியை விடுவித்த ஜோ பைடன் அரசு


அமெரிக்காவின் WNBA நட்சத்திரம் ஒருவரை மீட்க, ரஷ்யாவின் மரணத்தின் வியாபாரி என குறிப்பிடப்படும் ஆயுத ஒப்பந்ததாரர் ஒருவரை ஜோ பைடன் நிர்வாகம் விடுதலை செய்துள்ளது.

கூடைப்பந்து நட்சத்திரமான Brittney Griner

செவ்வாய்க்கிழமை ஐக்கிய அமீரக மாகாணமான அபுதாபியில் வைத்து ரஷ்ய அதிகாரிகளிடம் குறித்த நபர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்..
கூடைப்பந்து நட்சத்திரமான Brittney Griner கடந்த பிப்ரவரி மாதம் கஞ்சா கடத்தல் வழக்கில் ரஷ்யாவில் கைதான பின்னர், ஆகஸ்டு மாதம் 9 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.

பெண் விளையாட்டு வீரருக்காக... ரஷ்யாவின் மரணத்தின் வியாபாரியை விடுவித்த ஜோ பைடன் அரசு | Olympic Gold Medallist Brittney Griner Released

@getty

தற்போது Brittney Griner விடுவிக்கப்பட்ட தகவலை ஜனாதிபதி ஜோ பைடன் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
சில நிமிடங்கள் முன்னர் Brittney Griner உடன் பேசினேன், அவர் பாதுகாப்பாக உள்ளார், விமானத்தில் ஏறிவிட்டார், வீட்டுக்கு கிளம்பிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டு நட்சத்திரம் Brittney Griner-ஐ விடுவிக்கும் பொருட்டு ரஷ்யாவும் அமெரிக்காவும் பலகட்ட பேச்சுவார்த்தை முன்னெடுத்திருந்தது.
இறுதியில், அமெரிக்க சிறையில் இருக்கும் ஆயுத வியாபாரி Viktor Bout என்பவரை விடுவிக்க ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

ஆயுத வியாபாரி Viktor Bout

2008ல் தாய்லாந்தில் வைத்து கைதான Viktor Bout கடந்த 14 ஆண்டுகளாக அமெரிக்க சிறையில் தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.
UMMC அணிக்காக களமிறங்க ரஷ்யா சென்றிருந்த Brittney Griner அங்குள்ள விமான நிலையத்தில் கஞ்சா பொருட்களை கைவசம் வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.

பெண் விளையாட்டு வீரருக்காக... ரஷ்யாவின் மரணத்தின் வியாபாரியை விடுவித்த ஜோ பைடன் அரசு | Olympic Gold Medallist Brittney Griner Released

@getty

இரண்டுமுறை தங்கப்பதக்கம் வென்ற Brittney Griner கைதான விவகாரம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படித்தியிருந்தது.
பிரிட்னியை ரஷ்யா தவறாகக் காவலில் வைத்துள்ளது எனவும் ஜனாதிபதி பைடன் குறிப்பிட்டிருந்தார்.

இது ஏற்க முடியாத செயல் என குறிப்பிட்ட பைடன், ரஷ்யா உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.