Gujarat Himachal Election Results : பாஜக முதலமைச்சர்கள் வெற்றி… ஆனால் ஆட்சி?

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு டிச. 1 மற்றும் 5ஆம் தேதிகளில் இருக்கட்டமாக நடைபெற்றது. மொத்தமுள்ள 182 தொகுதிகளிலும், முதல்கட்ட தேர்தலில் 60.20 சதவீத வாக்குகளும், 2-வது கட்டத்தில் 64.39 சதவீத வாக்குகளும் பதிவாகின. 

ஒட்டுமொத்தமாக, இந்த தேர்தலில் 66.31 சதவீத வாக்குகள் பதிவாகின. 2018இல் நடைபெற்ற கடந்த சட்டப்பேரவை தேர்தலில், 71.28 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இம்முறை அதைவிட குறைவாகவே பதிவாகியுள்ளது. ஹிமாச்சலில் நவ. 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், சுமார் 26 நாள்களுக்கு பின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. 

வரலாறை உடைக்குமா பாஜக?

பாஜக ஆட்சியில் இருந்து வரும் நிலையில், தற்போதைய (11 மணி நிலவரம்) நிலவரப்படி காங்கிரஸ் 39 தொகுதிகளுடன் முன்னிலையில் உள்ளது. பாஜக 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆனால், தற்போது 4 தொகுதிகளில் முழு நிலவரம் வெளியாகிவிட்டதில், அந்த நான்கு தொகுதியையும் பாஜக கைப்பற்றியிருக்கிறது. 

அதில், ஹிமாச்சல் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், செராஜ் தொகுதியில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சேத் ராம் என்பவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளார். 57 வயதான தாக்கூர் 6ஆவது முறையாக வெற்றி பெற்றார். 

ஹிமாச்சலில் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மீண்டும் வெற்றி பெற்றதில்லை. எனவே, பாஜக முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க கடுமையாக போராடி வருகிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த படியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி கட்சிகள் முறையே 3ஆவது, 4ஆவது இடத்தில் உள்ளன. 

இதேபோன்று, குஜராத்தில் முதலமைச்சர் பூபேந்திர படேல், கட்லோடியா தொகுதியில் வெற்றி பெற்றார். பூபேந்திர படேல் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக, அந்த தொகுதியில் பதிவான வாக்குகளில் 80.86 சதவீத வாக்குகளை அவர் பெற்றிருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் 9.81 சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் 6.67 வாக்குகளுடன் ஆம் ஆத்மி உள்ளது.  

குஜராத்தில் பாஜக முன்னிலையில் இருப்பதால், அவர்கள் தொடர்ந்து 7ஆவது முறையாக ஆட்சியமைப்பார்கள் என்று தெரிகிறது. ஹிமாச்சலை பொருத்தவரை, கடும் போட்டி நிலவுவதால், முழுமையான விவரங்கள் வெளிவரும் வரை காத்திருக்க வேண்டியதுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.