அரியலூர் செம்புலிங்கம் இறப்பு குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில் இந்த வதந்திகளை பரப்புவோருக்கு போலீசார் எச்சரிக்கை எடுத்துள்ளனர்.
இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட காசாங்கோட்டை கிராமத்தில் செம்புலிங்கம் இறந்த சம்பவம் குறித்து பல வதந்திகள் சமூக வலைதளங்களின் மூலம் பரப்பப்பட்டு வருகிறது.
செம்புலிங்கத்தை போலீசார் கைது செய்யவோ, காவல் நிலையத்திற்கு அழைத்து வரவோ இல்லை. அவருடைய இறப்பு குறித்து செம்புலிங்கத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் புகார் கொடுத்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த வழக்கின் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையினர் மீது அவதூறு பரப்பும் விதமாக சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பினாலோ ,விசாரணையை திசை திருப்பும் நோக்கில் செயல்பட்டாலோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.