திருப்பதி:திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் நேற்று 36 மணிநேரம் காத்திருந்தனர்.
திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, 31 காத்திருப்பு அறைகளும் கடந்து, வெளியில் உள்ள தரிசன வரிசையில் மழையில் நனைந்தபடி பக்தர்கள் காத்திருந்தனர்.
எனவே, தர்ம தரிசனத்திற்கு 36 மணிநேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு 3 – 4 மணிநேரமும் பக்தர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம் உள்ளிட்ட இடங்களில் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement