கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காஞ்சிரக்கோடு விரிக்கோடு அருகே நெல்லிக்கன் விளை பகுதியைச் சேர்ந்த 51 வயதான பமலா என்பவர் உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவராக இருக்கின்றார்.
சம்பவ தினத்தில் பேரூராட்சி கூட்டம் முடிந்ததும் பேரூராட்சி துணை தலைவரும் 14 ஆவது வார்டு உறுப்பினருமான செல்வின் என்பவர் பமலாவிடம் பேசச் சென்றார். அதற்கு பமலா கூட்டம் முடிவடைந்து விட்டது என்று தெரிவித்து அங்கிருந்து நகர்ந்துள்ளார்.
இதனால் அவமானத்தில் ஆத்திரம் அடைந்த செல்வின் அவருடைய தம்பி பிரவினுடன் சேர்ந்து கமலாவை தாக்கி இருக்கின்றனர். மேலும் பமலா குறித்து மிகவும் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பயந்து போன பமலா உடனே மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்த பிரவீன் மற்றும் செல்வின் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.