வாய்க்கு வந்தபடி பேசுபவர்கள் பேசட்டும் – ராஷ்மிகா பதிலடி

தென்னிந்தியா சினிமா மட்டுமல்லாது ஹிந்தியிலும் நடிக்கிறார் ராஷ்மிகா. தற்போது விஜய் உடன் வாரிசு படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு இந்தபடம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் தனது முதல்படமான கிரிக் பார்ட்டி பற்றி பேசும்போது, அந்த தயாரிப்பு நிறுவனம், தயாரிப்பாளரை குறிப்பிடவில்லை. இதை சுட்டிக்காட்டியும் தன்னை வளர்த்துவிட்ட கன்னட சினிமாவை புறக்கணிப்பதாகவும் கூறி கன்னட திரையுலகம் ராஷ்மிகாவுக்கு தடை போட நடவடிக்கை எடுப்பதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் சினிமா வட்டாரங்கள் மறுத்துவிட்டன. மேலும் பலதரப்பட்ட சினிமா ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட காந்தாரா படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை என கூறியதும் இவர் மீது கன்னட சினிமாவில் வெறுப்பு உண்டாக காரணமாக அமைந்தது.

இந்நிலையில் ராஷ்மிகா கூறுகையில், ‛‛காந்தாரா படத்தை பார்த்து விட்டேன். படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்றார். மேலும் தன்னைப்பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள அவர், ‛‛வாய்க்கு வந்தபடி பேசுபவர்கள் பேசட்டும். உண்மை என்னவென்று அவர்களுக்கு தெரியாது. அதை நான் பொருட்படுத்தமாட்டேன். சினிமாவில் என் நடிப்பை குறை சொன்னால் அதை திருத்திக் கொள்ள உழைப்பேன். ஆனால் சொந்த வாழ்க்கை பற்றி பேசுபவர்களின் பேச்சைக் கண்டு கொள்ள மாட்டேன். எனக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை'' என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.