4,500 ஆண்டுகள் பழைமையான கற்கால பகுதிகள் கண்டுபிடிப்பு| மம்மிகளை ஒப்படைக்கும் அயர்லாந்து

ஐ.எஸ்.யு கிராண்ட் பிரிக்ஸ் ஸ்கேட்டிங் போட்டி இத்தாலியின் தூரினில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரசிகர்களைக் கவர்ந்த நிலவு. இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலவின் புகைப்படங்கள்.

ஆப்ரிக்காவின் புர்கினோ ஃபாசோ நாட்டில் ராணுவ படைக்கு ஆதரவு அளித்த பொதுமக்கள் 10 கொல்லப்பட்டனர்.

அமெரிக்க காங்கிரஸ் தன்பாலின திருமணத்தைப் பாதுகாக்கும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

பெரு நாட்டின் முன்னாள் பிரதமர் பெட்ரோ காஸ்டில்லோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் பதிய பிரதமராக டினா பொலுஆர்ட் தேர்வு.

ஸ்காட்லாந்தில் 4500 ஆண்டுகள் பழமையான கற்கால பகுதிகள் கண்டுபிடிப்பு.

தென் கொரியாவின் சியோலில் நீருக்கடியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பார்ப்பவர்களைக் கவர்ந்த கடல் கன்னிகள்.

பின்லாந்து நாட்டில் மைனஸ் 25 டிகிரி குளிரிலும் சைக்கிளில் செல்லும் பொதுமக்கள்!

அயர்லாந்தின் பல்கலைக்கழகத்தில் இருக்கும் 2300 ஆண்டுகள் பழமையான எகிப்தின் மம்மிகளை திரும்பி ஒப்படைக்க அயர்லாந்து திட்டம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.