ஊருக்குள் படையெடுக்கும் பாம்புகளால் பொன்னமராவதி மக்கள் அச்சம்! ஒரே நாளில் 3 பாம்புகள்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அம்மா நகரில் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருபவர் பாரத். இவர் பணிக்கு சென்று விட்டு மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த பொழுது ஆறடி நீளம் உள்ள சாரைப்பாம்பு வீட்டிற்கு கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பாரத் உடனடியாக பொன்னமராவதி தீயணைப்புத் துறைனருக்கு தகவல் அளித்தார்.

உடனடியாக   நிலைய அலுவலர் சந்தானம் தலைமையில் விரைந்து வந்த பொன்னமராவதி தீயணைப்புத் துறையினர் வீட்டிற்குள் பதுங்கி இருந்த சாரைபாம்பை பிடித்து அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

இதேபோல், அப்பகுதியில் இருக்கும் மற்றொரு வீட்டிற்குள்ளும் பாம்பு புகுந்தது. இதேபோல் அங்கு இருக்கும் கடையிலும் பாம்பு புகுந்தது. இதனை கேள்விப்பட்ட மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். அடுத்தடுத்து 3 இடங்களில் பாம்புகள் மக்கள் வசிக்கும் இடங்களில் பிடிப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மழைக்காலமாக இருப்பதால் பாம்புகள் குடியிருப்புகளை நோக்கி படையெடுப்பதாக கூறப்படுகிறது. காடுகளையொட்டி இருக்கும் மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறு வனத்துறை அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.