புதுடில்லி: ‘வால்வோ கார்ஸ் இந்தியா’ நிறுவனம், பெங்களூரில் உள்ள அதன் ‘டிஜிட்டல்’ தொழில்நுட்ப மையத்தை விரிவுபடுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான மற்றும் தரமான இணையதள சேவைகளை வழங்குவதற்காக, இம்முயற்சியை மேற்கொண்டுள்ளதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்திய வாகன சந்தையில் 2007ம் ஆண்டு முதல் இயங்கி வரும் வால்வோ, டிஜிட்டல் தொழில்நுட்ப மையத்தை துவக்கியதுடன், பிரத்யேக உபகரணங்கள் கிடங்கு மற்றும் தயாரிப்பு ஆலையையும் இந்தியாவில் நிறுவியுள்ளது. இது குறித்து, வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜோதி மல்ஹோத்ரா கூறியதாவது: வால்வோ நிறுவன சேவைகளில், டிஜிட்டல் தொழில்நுட்பம் மிகவும் முக்கிய பங்கை ஆற்றி வருகிறது. வருங்கால தலைமுறை வால்வோ கார்களின் வளர்ச்சியில், இந்த டிஜிட்டல் தொழில்நுட்ப மையத்தின் பங்கு அளவற்றதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement