மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 3:15 மணியளவில் கரையை கடந்ததிலிருந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் மிக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையின் அண்டை மாவட்டமான திருவள்ளூரில் அதி கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மட்டும் சராசரியாக 120 மி.மீ மழை பெய்துள்ளது.
குறிப்பாக திருவள்ளூர் 130 மில்லிமீட்டர், செங்குன்றம் 120 மில்லிமீட்டர், பூந்தமல்லி 115 மில்லிமீட்டர், ஆவடி – 170 மில்லிமீட்டர், திருத்தணி – 162 மில்லிமீட்டர், கும்மிடிப்பூண்டி – 134 மில்லிமீட்டர், சோழவரம் – 129 மில்லிமீட்டர் என மழை பதிவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.