நடிகைகளை தரக்குறைவாக பேசினாரா விஜய்? வெடிக்கும் சர்ச்சை!

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத தூணாக இருக்கும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்த விஷயம் தான்.  தற்போது இவரை பற்றி சக நடிகர் ஷாம் கூறிய விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தி இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.  வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த படத்தில் விஜய்க்கு சகோதரனாக ஷாம் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.  ஏற்கனவே இவர் விஜய் நடிப்பில் வெளியான ‘குஷி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  ஷாம் நடிப்பில் வெளியான இயற்கை, லேசா லேசா போன்ற படங்கள் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இன்றளவும் இருக்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற பேட்டியொன்றில் ‘வாரிசு‘ படத்தில் நடித்திருப்பது குறித்தும், விஜய் பற்றியும் சில விஷயங்களை நடிகர் ஷாம் பகிர்ந்திருக்கிறார், அதில் அவர் ஓப்பனாக கூறுவதாக நினைந்து உளறிக்கொட்டிய சில விஷயம் தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  அவர் கூறுகையில், “குஷி படத்தில் நடித்தபோது அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் என்று பேசிக்கொள்கிறார்களே என்று விஜய்யிடம் கேட்டேன், அதற்கு அவர் மேலே கையை காட்டி எல்லாம் ஆண்டவன் செயல் என்று கூறினார்.  அதற்கு பிறகு நான் ’12பி’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானேன், அதன் பின்னர் நான் அண்ணனை சந்தித்தேன்.  அப்போது அவர் என்னிடம் டேய் என்னடா வரும்போதே சிம்ரன், ஜோதிகான்னு ரெண்டு குதிரையோட வர என்று கேட்டார்.  அதற்கு நானும் அவர் சொன்னதை போலவே மேலே கையை காமித்து எல்லாம் அவன் செயல்” என்று சொன்னதாக கூறியுள்ளார்.

 

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியதையடுத்து ஒரு நடிகர் இப்படி நடிகைகளை தரக்குறைவாக பேசலாமா என்று வசைபாடி வருகின்றனர்.  இதற்கு முன்னர் ஒரு வீடியோவில் பேசிய ஷாம், ‘துணிவு’ படமும் பொங்கலுக்கு வெளியாவதாக விஜய்யிடம் சொன்னபோது, நல்ல விஷயம் அவரும் நம்ம நண்பர் தானே, இரண்டு படமும் வரட்டும் இரண்டுமே நல்ல ஓடும் என்று விஜய் சொன்னதாக கூறி விஜய்யை பெருமைப்படுத்தி இருந்தார்.  இந்நிலையில் தற்போது இவர் பகிர்ந்துகொண்ட விஷயம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.