புயல் கரையை கடந்த பிறகு உதவி எண்களை அறிவித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை …

சென்னை: மாண்டஸ் புகல் நள்ளிரவு கரையை கடந்து, அதனால் ஏற்பட்ட சேதங்களை தமிழகஅரசு சரி செய்து வரும் நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தயார் என  அதற்கான உதவி எண்ணை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார்.

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்றிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. நள்ளிரவு 10 மணிக்கு கடக்கத் தொடங்கிய இந்த புயல் அதிகாலை 3மணி அளவில் முழுவதுமாக கரையை கடந்ததாக கூறப்படுகிறது. இந்த புயல் பாதிப்பு இன்றும் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலின் போது வீசிய சூறைக்காற்றுடன் வடிய மழை காரணமாக, சென்னையில் மட்டும் 300க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. அதை அகற்றும் பணி மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டன.

இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய பாஜக தொண்டர்கள் தயாராக உள்ளனர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதன்படி,  உதவிக்கு 9150021831, 9150021832, 9150021833 என்ற எண்களில் அழைக்கலாம் எனவும் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

புயல் கரையை கடந்தும், நிவாரண பணிகளையும் தமிழகஅரசு முன்னெடுத்து வரும் நிலையில், தற்போது பாஜக சார்பில் உதவி எண்களை அறிவித்துள்ளது நெட்டிசன்களால் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.