திருப்பதி, டிச. 11–
திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்காக, டிச., 16லிருந்து 31 வரையிலான நாட்களுக்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன.
திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்கான விரைவு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் மாதந்தோறும் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.
இதன்படி, டிசம்பரின் முதல் 15 நாட்களுக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட நிலையில், டிச., 16லிருந்து, 31ம் தேதி வரையிலான நாட்களுக்கான டிக்கெட்டுகளை, தேவஸ்தானம் நாளை மறுநாள் காலை 9:00 மணிக்கு இணையதளத்தில் வெளியிட உள்ளது.
‘பக்தர்கள் இந்த நாட்களில் முன்பதிவு செய்து, ஏழுமலையான் தரிசனத்தில் பங்கு கொள்ள வேண்டும்’ என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement