Baba Rerelease review: Mandous புயலை ஓரங்கட்டிய பாபா, 2ம் பாகம் வருது போல: ட்விட்டர் விமர்சனம்

ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி, தயாரித்த பாபா படம் கடந்த 2002ம் ஆண்டு வெளியானது. ஆனால் அந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்காமல் தோல்வி அடைந்தது. பாபா படத்தில் அப்போதைய ஆளும்கட்சியான அதிமுக பற்றி வசனம் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாபா படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடுகிறார் ரஜினி என்றெல்லாம் அப்பொழுது பேசப்பட்டது. ரஜினியின் கடைசி படம் என்று பேசப்பட்டபோதிலும் பாபா சினிமா ரசிகர்களை கவரத் தவறிவிட்டார். படம் படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் பாபா படத்தை பட்டி டிங்கரிங் செய்து மீண்டும் ரிலீஸ் செய்தால் நிச்சயம் வரவேற்பு கிடைக்கும் என்று நம்பினார் ரஜினி. தன் மனதிற்கு நெருக்கமான பாபா படம் மீண்டும் ரிலீஸாகிறது என்று அறிவிப்பு வெளியிட்டார்.

அவரின் பிறந்தநாள் அன்று தான் பாபா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய முடிவு செய்தார்கள். இந்நிலையில் முன்கூட்டியே இன்று ரிலீஸ் செய்துவிட்டனர்.

மேலும் செய்திகளை படிக்க

மாண்டஸ் புயலால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பாபா படம் ஓடும் தியேட்டர்களுக்கு ரஜினி ரசிகர்கள் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாபா படத்தின் புது கிளைமாக்ஸை பார்த்தால் அதன் இரண்டாம் பாகம் வரும் போன்று என பேச்சு கிளம்பியிருக்கிறது. பாபாஜி என்னை உங்க சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளுங்கள் என ரஜினிகாந்த் கூறுகிறார். அதற்கு பாபாஜியோ, நீ ஏற்கனவே என் சிஷ்யன் தான். நீ உன் தாயோட மனசை நோகடிச்சிருக்க.

தாய் என்பவள் மனித ரூபத்தில் இருக்கும் தெய்வம். என்ன தான் தான தர்மம் செய்தாலும் தாயை சந்தோஷமாக வச்சுக்கலைனா மோட்சம் கிடைக்காது. நீ அடுத்த பிறவியில அதே தாய் வயிற்றில் பிறந்து, அந்த தாயோட எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி சந்தோஷப்படுத்தினால் இந்த மாய வலை தானா விலகிடும். அப்போது நானே உன்னை அழைச்சுக்கிறேன் என்கிறார். அத்துடன் படம் முடிகிறது.

படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பாபா ரிட்டர்ன்ஸ் பற்றி ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

தலைவரை மீண்டும் திரையில் பார்த்த சந்தோஷத்தில் கண்ணீர் வருகிறது. 20 ஆண்டுகள் கழித்து அதே படத்தை அதே தியேட்டரில் பார்ப்பேன் என நினைக்கவில்லை.

தலைவர் சிறந்த டான்ஸர் இல்லை. ஆனால் அவர் டான்ஸ் ஆடினால் மொத்த இந்திய சினிமாவும் அவருடன் ஆடும்.

பாபா வருகிறார் லைட் எல்லாம் போடுங்கடா என்று கவுண்டமணி கூறியதும் தியேட்டரில் நிஜத்தில் லைட் போட்ட தருணத்தில் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

கிளைமாக்ஸ் தீயாக இருக்கிறது. அருமையான படம். தியேட்டரில் கொண்டாடினோம்.

20 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீஸான படத்தை மீண்டும் ரிலீஸ் செய்து தியேட்டர்களை திருவிழாக்கோலம் பூண வைப்பது ரஜினியால் மட்டுமே முடியும்.

தியேட்டருக்கு வந்து ரசிகர்களுடன் சேர்ந்து பாபா படத்தை பார்த்து ரசித்தார் லதா ரஜினிகாந்த். மேலும் அவர் தியேட்டரில் கேக் வெட்ட அங்கிருந்த ரஜினி ரசிகர்களோ தங்களின் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பாட்டு பாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

Bigg Boss Tamil 6: பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை நடந்திராத சம்பவம்: ஏன் திடீர்னு…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.