Gayathri Raghuram: திருமணமான இரண்டே ஆண்டில் விவாகரத்து ஏன்.?: மனம் திறந்த காயத்ரி ரகுராம்.!

நடிகை, டான்ஸ் மாஸ்டர் மற்றும் அரசியல்வாதி என பல தளங்களிலும் இயங்கி வருபவர் நடிகை காயத்ரி ரகுராம். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக இவர் பங்கேற்றார். இந்நிலையில் தனது திருமண வாழ்க்கை குறித்து காயத்ரி ரகுராம் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபுதேவா நடித்த ‘சார்லி சாப்ளின்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். அதன் பிறகு அவர் ஒரு சில படங்களில் நடித்த இவர், பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் இவரின் செயல்பாடுகள் பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. ரசிகர்களும் இவரை திட்டி தீர்த்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விஜய் தொலைக்காட்சியின் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். அதன் பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட்டார். ட்விட்டரில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பல கருத்துக்களை பகிர்ந்து வந்தார். அண்மையில் அந்த கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

காயத்ரி ரகுராம் கடந்த 2006ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தீபக் சந்திரசேகர் என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிகக் குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது. அதாவது 2008ஆம் ஆண்டு காயத்ரி விவாகரத்து வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு பின்னர் கடந்த 2010ஆம் ஆண்டு முடிவுக்கு வந்து இருவரும் சட்டபூர்வமாக பிரிந்தனர்.

Varalaru Mukkiyam: எஸ்எம்எஸ் படம் அளவிற்கு இருந்ததா.?: ஜீவாவின் ‘வரலாறு முக்கியம்’ விமர்சனம்.!

இதுதொடர்பான பேட்டியில், மிகவும் சின்ன வயதில் எனக்கு திருமணம் ஆனது. அதனால் சில கருத்து வேறுபாடு காரணமாக என்னுடைய திருமண வாழ்க்கை முடிந்துவிட்டது. அதற்காக அவரையும் நான் குற்றம் சொல்லப்போவதில்லை. அவர் தனது இன்னொரு வாழ்க்கையை தேடி சென்று விட்டார். அதனால் இதுபற்றி மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புவது அர்த்தமே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

VJ Archana: விஜே அர்ச்சனாவின் வாழ்வை மாற்றிய சூப்பர் ஸ்டார்: அவரே சொன்ன தகவல்.!

மேலும் தான் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், தன்னுடைய வாழ்க்கையை முழுவதுமாக கடவுளிடம் அர்ப்பணித்து விட்டதாகவும் அவர் என்ன முடிவு செய்கிறாரோ அதை ஏற்றுக்கொண்டு வாழ்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் நடிகை காயத்ரி ரகுராம். அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thunivu, Chilla Chilla: போடு வெடிய.. தாறுமாறாய் வெளியான ‘சில்லா சில்லா’: ஏகே ஆட்டம் ஆரம்பம்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.