ஓட்டலில் நடிகர் அஜித்துக்கு சிலை; வெறும் 2 ரூபாய்க்கு உணவு!

தமிழ் திரை உலகின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். கடைசியாக இவரது நடிப்பில் ‘வலிமை’ வெளியாகி இருந்தது. இந்நிலையில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் ‘துணிவு’ படத்தில் அஜித் நடித்துள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இது. இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்து உள்ளார்.

தற்போது இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘சில்லா சில்லா’ வெளியாகி உள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். பாடல் வரிகளை ‘காக்கா கதை கேட்டிருக்கேன்’ பாடல் புகழ் வைஷாக் எழுதி உள்ளார்.

3.53 நிமிடங்கள் டைம் டியூரேஷன் கொண்ட இந்த பாடல் மிகவும் எனர்ஜி தரும் வகையில் உள்ளதாக வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு நடன இயக்குநர் கல்யாண் நடனம் அமைத்து உள்ளார்.

அஜித்தின் நடன அசைவுகளும் பாடலின் வீடியோவில் சில இடங்களில் இடம் பிடித்துள்ளன. மேலும் மஞ்சு வாரியர், பாவ்னி, அமீர், சிபி போன்றவர்களுடன் அஜித் ஒரு காட்சியில் தோன்றுகிறார்.

பாசிட்டிவான மேற்கோள்கள் அடங்கிய வகையில் இந்த பாடலின் வரிகள் இடம் பெற்றுள்ளன. அனிருத் வாய்ஸில் வெளிவந்துள்ள மற்றும்மொரு ஹிட் பாடலாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் ரசிகர்கள் உட்பட பலரும் இந்த, ‘சில்லா சில்லா’ பாடலை கொண்டாடி வருகின்றனர். இது குறித்து சமூக வலைதளங்களிலும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் அஜித்துக்கு தனியார் ஓட்டலில் சிலை வைக்கப்பட்டுள்ளதோடு, வெறும் 2 ரூபாய்க்கு உணவு வழங்கப்பட்டது தேனி மாவட்டத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் தனியார் உணவகத்தில் நடிகர் அஜித்துக்கு ரசிகர் ஒருவர் சிலை வைத்து உள்ளார். இதை அறிந்து ஏராளமானோர் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அங்கு வந்து முண்டியடித்து செல்பி எடுத்து செல்கின்றனர்.

தேனி மாவட்டம், சின்னமனூர்- கம்பம் செல்லும் சாலையில், அஜித் ரசிகர் நடத்தும் வீரம் ரெஸ்டாரன்ட் கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. கடை திறப்பு விழாவின்போது முக்கிய அம்சமாக துணிவு படம் வெளியாவதை முன்னிட்டு சுமார் எட்டு அடி உயரம் கொண்ட நடிகர் அஜித் சிலையை தத்ரூபமாக அமைத்து கடையின் முன் பகுதியில் வைத்துள்ளார் ‘அஜித் ரசிகர் காளிதாஸ்’.

இந்த சிலையை காண்பதற்கு ஏராளமான அஜித் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியதால் கம்பம் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

மேலும் துணிவு படம் வெளியாவதை முன்னிட்டு உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு புரோட்டா, தேநீர், வடை, ஆகிய உணவு பொருள்களை இரண்டு ரூபாய்க்கு வழங்கி வருகின்றனர்.

இதனால் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் சின்னமனூர் தனியார் உணவகத்தை நோக்கி படையெடுத்து வந்து உணவுப் பொருள்களை வாங்கி செல்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.