காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷாஹ்ரே நாவ் பகுதியில் ஓட்டல் அருகே சீனர்கள் அதிகம் சென்று வரும் ஓட்டலை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.துப்பாக்கி சத்தம் கேட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. இந்நிலையில் தாக்குதல் நடத்திய மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொதுமக்கள் இருவர் காயமடைந்ததாகவும் உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement