தீபிகா படுகோன் மற்றும் ஷாரூக்கான் ஜோடியாக நடித்திருக்கும் பதான் திரைப்படம் அடுத்தாண்டு, அதாவது 2023 ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளடது. ‘பேஷாரம் ரங்’ பாடலில் தீபிகா படுகோனின் நடிப்பு ஷாருக்கானையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
ஷாருக்கான் நீண்ட காலமாக பெரிய திரையில் காணப்படவில்லை. இதனால், அவரது அடுத்த படத்திற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை போக்கும் வகையில் ஷாருக்கின் அடுத்த படமான ‘பதான்’ 2023 ஜனவரியில் வெளியாகிறது. பதான் படத்தில் ஷாருக்கானுடன் ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், தீபிகா, ஷாருக் ஜோடியாக நடிக்கும் ‘பேஷரம் ரங்’ படத்தின் முதல் பாடல் இப்போது வெளியாகியுள்ளது.
யூடியூப் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் டிரெண்டிங்கிலும் இந்தப் பாடல் இடம்பிடித்துள்ளது. வெளியிடப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பேஷாரம் ரங் பாடல் பெற்றுள்ளது. இந்த பாடலில் தீபிகா படுகோன் செம ஹாட்டாக நடித்துள்ளார். பாடல் முழுவதும் பிகினியில் வந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
ஷாருக்கான், ஒரு பார்வையாளர் போல் தான் பாடலில் வருகிறார். தீபிகா படுகோன் முழுவதும் பாடலை ஆக்கிரமித்திருக்கும் நிலையில், அவரை வியந்து பார்க்கும் ஒருவராக தான் ஷாருக்கான் இருக்கிறார். அவரும் தன்னுடைய கட்டுமஸ்தான உடலை காண்பித்துள்ளார். இருப்பினும், தீபிகாவின் பிகினி உடைக்கு முன்னால் ஷாருக்கானின் வருகையெல்லாம் ரசிகர்களிடத்தில் அவ்வளவு பதிவாகவில்லை. இந்நிலையில், தீபிகா படுகோனின் பிகினி உடை டான்ஸூக்கு இருவேறு விமர்சனங்கள் சமூகவலைதளத்தில் எழுந்துள்ளது. சிலர், தீபிகா படுகோன் இந்த பாடலில் ஆடியிருக்கும் ஆட்டம், கணவர் ரன்வீர் சிங்கையே கடுப்பேற்றும் என கமெண்ட் அடித்துள்ளனர்.