அரசு விரைவு பேருந்துகளுக்கான பொங்கல் முன்பதிவு தொடங்கியது…

சென்னை: ஜனவரி 14ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு இன்று தொடங்கியது.

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை உள்பட நகர்ப்புறங்களில் தொழில் நிமித்தமாக வசிப்பவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதற்காக தமிழகஅரசும் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்த வரும் பொங்கல் பண்டிகை 2023ம் ஆண்டு ஜனவரி 14ந்தேதி வருகிறது. இதையடுத்து அரசு விரைவு பேருந்துகளில் இன்றுமுதல் முன்பதிவு தொடங்கி உள்ளது

ஏற்கனவே ரயில்,  பொங்கல் பண்டிகைகக்கான முன்பதிவு  4 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டதால் அனைத்து ரெயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன.இந்த நிலையில், தற்போது அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடஙகி உள்ளது. அதன்படி,  ஜனவரி 12-ந்தேதி பயணம் செய்வதற்கு இன்று முன்பதிவு செய்யலாம். பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடியவர்கள் இன்று முதல் அரசு விரைவு பஸ் களுக்கு முன்பதிவுக்கு திட்டமிடலாம்.

ஜனவரி 13-ந்தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை முன்பதிவு செய்ய வேண்டும். tnstc.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கடைசிநேர கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்பதிவுக்கு தேவையான பஸ்கள் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும், முதலில் அரசு விரைவு பஸ்களுக்கும் பின்னர் போக்குவரத்து கழக பஸ்களுக்கும் முன்பதிவு செய்யப்படும் பொங்கல் சிறப்பு பஸ்கள் ஜனவரி முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.