இங்கிலாந்து வீரரை விராட் கோலியுடன் ஒப்பிட்ட பென் ஸ்டோக்ஸ்…!

முல்தான்,

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பாகிஸ்தான் தொடரை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. ஆனால், இங்கிலாந்து அணி பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பயமில்லா, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். வெற்றிக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

இருவருடைய எண்ணம் போன்று இங்கிலாந்து முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அபாரமாக விளையாடியது. ஒவருக்கு சராசரியாக 6 ரன்கள் என்றவிதம் பேட்டிங் செய்து பாகிஸ்தான் பந்து வீச்சை திணறடித்தனர். இதன் காரணமாக இரண்டு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.

அந்த அணியின் ஹேரி ப்ரூக் பேட்டிங் இங்கிலாந்து வெற்றிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ராவல்பிடிண்யில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 116 பந்தில் 153 ரன்கள் விளாசினார். 2-வது இன்னிங்சில் 65 பந்தில் 87 ரன்கள் சேர்த்தார்.

முல்தானில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 149 பந்தில் 108 ரன்கள் குவித்து முத்திரை பதித்தார். 22 வயதாகும் ப்ரூக் கடந்த ஜனவரி மாதம் டி20 அணியில் அறிமுகம் ஆனார். செப்டம்பர் மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். ஒருநாள் போட்டியில் விளையாட தயாராக இருக்கிறார்.

இந்த நிலையில் ஹேரி ப்ரூக்கை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியுடன் பென் ஸ்டோக்ஸ் ஒப்பிட்டுள்ளார். ப்ரூக் குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறியதாகவது:-

கடந்த கோடைக்கால சீசனில் அணியில் இணைந்த ப்ரூக் தற்போது, கோடைக்கால சீசன் முடிவடைவதற்குள் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகும் வகையில் முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் தொடரில் அவர் விளையாடிய விதம் அபாரமானது. அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ஜொலிக்கும் அரிய வீரர்களில் ஒருவராவார்.

எந்த இடத்திலும் ஜொலிக்கும் வீரராக அவரை பார்க்கலாம். அதேவேளையில், அரிய வீரர்களில் ஒருவர் இந்திய அணியின் விராட் கோலி. அவருடைய தொழில்நுட்ப ஆட்டம், மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் எந்த இடத்திலும் ரன்கள் குவிக்க எளிதாக்குகிறது.” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.