டெல்லி: இடஒதுக்கீட்டு முறையை ரத்துசெய்ய கோரிய பொதுநல வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. நாட்டில் பின்பற்றப்படும் இடதுகீடு முறையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஷிவானி தங்கர் என்பவர் ஒரு பொதுநல மனுவை உச்சநீதிமன்றத்தில் தக்கல் செய்தார்.
இந்த மனுவை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இடஒதுக்கீடு முறையை ரத்து செய்யவேண்டுமா? இது எந்த மாதிரியான பொதுநல வழக்கு என கேள்வியெழுப்பினார். இடஒதுக்கீட்டு முறை சமத்துவத்திற்கு எதிரானது என்றும், சாதிய முறையை எடுத்து செல்கிறது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த பொது நல வழக்கை திரும்ப பெறாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் விளம்பர நோக்கில் சட்டக்கல்லூரி மாணவி இதுபோன்ற மனுவை தக்கல் செய்ததாக நீதிபதிகள் தெரிவித்தகனார். அப்போது மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுவை திரும்பப்பெற அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை திரும்ப பெற அனுமதியளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.