இலங்கையர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆட்கடத்தல் சம்பவம்! ஆபத்துக்களை தவிர்க்குமாறு எச்சரிக்கை


இலங்கையில் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆட்கடத்தல்காரர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜோர்தான் ஊடாக பல்வேறு நாடுகளில் தொழில் வாய்ப்புக்காக சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் இலங்கையர்களின் மற்றுமொரு மோசடி தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இலங்கையர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆட்கடத்தல் சம்பவம்! ஆபத்துக்களை தவிர்க்குமாறு எச்சரிக்கை | Human Trafficking Incident In Sri Lanka

ஆபத்துக்களை தவிர்க்குமாறு எச்சரிக்கை

இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற காத்திருக்கும் இலங்கையர்கள், ஆட்கடத்தல்காரர்களினால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்க்குமாறும் பொதுமக்களை பணியகம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையர்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆட்கடத்தல் சம்பவம்! ஆபத்துக்களை தவிர்க்குமாறு எச்சரிக்கை | Human Trafficking Incident In Sri Lanka

இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வேலைவாய்ப்புக்காக புறப்படுவதற்கு முன்னர் தமது விபரங்களை பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

1989 அல்லது 0112 864241 என்ற 24 மணித்தியால தகவல் நிலையத்துடன் தொடர்பு கொண்டு கடத்தல்காரர்களின் தகவல்களை வழங்குமாறு பணியகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.