உதயநிதி ஸ்டாலின் எனும் நான்… அப்பா அன்று ’அப்படி’ சொன்னார்… மகன் என்ன சொல்லப் போகிறார்?

’முத்துவேல்

ஸ்டாலின் எனும் நான்…’ என்று சொல்லி தான் மே 7, 2021ல் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்

. இவரது தலைமையிலான திமுக ஆட்சி சரியாக 19 மாதங்களை கடந்துள்ள நிலையில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. இதுதொடர்பான தகவல் வெளியானதில் இருந்தே தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

பிரம்மாண்ட ஏற்பாடுகள்

நேரம், நாள் குறிப்பது, தலைமை செயலகத்தில் தனி அறை, ஆளுநரிடம் ஒப்புதல், பதவியேற்பிற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் என அடுத்தடுத்த விஷயங்கள் களைகட்ட ஆரம்பித்தன. ஒருபக்கம் தலைமை செயலகத்தில் இரண்டாவது மாடியில் தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அறைக்கு அருகில் புதிதாக அறை அமைக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் ஆளுநரிடம் ஒப்புதல் பெற்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது.

பதவியேற்பு விழா

நாளை (டிசம்பர் 14) காலை 9.30 மணிக்கு ராஜ்பவனில் நடைபெறும் விழாவில் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். தனது பதவிப் பிரமாணத்தை உதயநிதி எப்படி தொடங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற போது பேசியது மிகுந்த கவனம் பெற்றது.

ஸ்டாலின் ஸ்டைலின் உதயநிதி

அதன்பிறகு ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்பது ஒரு பிராண்ட் போல் மாறிவிட்டது. திமுக பொதுக் கூட்டங்களில் பேசும் போதெல்லாம் நான் வெறும் ஸ்டாலின் அல்ல. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். சவால்களை எதிர்கொள்வேன். பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவேன். தமிழக மக்களை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்வேன் என்றெல்லாம் ஸ்டாலின் பேசத் தொடங்கி விட்டார்.

அந்த வகையில் உதயநிதியின் பதவிப் பிரமாணம் எவ்வாறு அமையப் போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது. இதோ சில கணிப்புகள் இங்கே…

உதயநிதி எனும் நான்…

எனும் நான்…

கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி எனும் நான்…

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி எனும் நான்…

இதேபோல் உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த துறை வழங்கப்பட போகிறது என்பதும் விவாதப் பொருளாக இருக்கிறது. அமைச்சர் மெய்யநாதனிடம் இருந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடுத் துறையும், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து சிறப்பு திட்ட அமலாக்கத் துறையும் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் இளைஞர்கள் மத்தியிலும் கவனம் ஈர்க்க முடியும் என்கின்றனர் உடன்பிறப்புகள்.

உதயநிதிக்கு எந்த துறை?

மேலும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை மூலம் அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் ஒன்றிணைந்து செயலாற்ற முடியும். இதன்மூலம் போதிய அனுபவம் பெற்று பெரிய துறைகளை கையாளும் அளவிற்கு உதயநிதி வளரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு பதவியேற்பு விழா முடிந்த சில மணி நேரங்களில் அல்லது நாட்களில் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.