தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேலும், இன்று நீலகிரி, திருவள்ளூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, விருதுநகர், மதுரை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் உட்பட 15 மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் நேற்று இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கனமழை காரணமாக இன்று (13.12.2022) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது